Aanathi Devan Un Aadaikalamae

அநாதி தேவன் உன் அடைக்கலமே
அவன் நித்திய புயங்கள் உன் ஆதாரமே (2)

இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
- அநாதி தேவன் உன் அடைக்கலமே

1. காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார்
தூய தேவ அன்பே (2)
இவ்வனாந்தரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்
- இந்த தேவன் என்றென்றுமுள்ள
- அநாதி தேவன் உன் அடைக்கலமே

2. கானகப் பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே (2)
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே
- இந்த தேவன் என்றென்றுமுள்ள
- அநாதி தேவன் உன் அடைக்கலமே