Azhaitheerae Yesuvae Anbodae

அழைத்தீரே இயேசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே (2)
பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன் (2)
ஆயள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து ஆண்டவரை அடைவேன்(2)
- அழைத்தீரே இயேசுவே

ஆதி விசுவாசம் தங்கிடவே
ஆண்டவர் அன்பு பொங்கிடவே (2)
ஆதி அப்போஸ்தலரே
உபதேசம் அளித்தனரே (2)
நல் பூரண தியாகப் பாதை நடந்தே நன்றியுடன் உழைப்பேன் (2)
- அழைத்தீரே இயேசுவே