Deva Pitha Entan Maeipan Azhzho

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ?
சிறுமைத் தாழ்ச்சி அடைகிலேனே
ஆவலதாய் எனைப் பைம்புல் மேல்
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்
- தேவ பிதா

1. ஆத்துமந் தன்னை குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாய் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்
- தேவ பிதா

2. சா நிழல் பள்ளத் திறங்கடினும்
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே
வானபரன் என்னோடிருப்பார்
வளை தடியும் கோலுமே தேற்றும்
- தேவ பிதா

3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென்றேற் படுத்தி
சுக தைலம் கொண்டேன் தலையை
சுகமாய் அபிஷேகம் செய்குவார்
- தேவ பிதா

4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும்
நேயன் வீட்டினில் சிறப்போடே
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்
- தேவ பிதா