Ezhumbhi Vaa Nee

எழும்பி வா நீ...
என் பிரியமே என் ரூபவதியே-4

சாம்பலை சிங்காரமாக்கி
புலம்பலை ஆனந்தமாக்குவேன் - 2 - எழும்பி

1. உடைந்து போன கனவால்
உந்தன் வாழ்க்கையே கசக்குதோ? (கசந்ததோ?)
விழுந்துபோன தருணங்கள் நினைத்து
நம்பிக்கை இழந்தாயோ?-2

பருவங்கள் மாற்றுவேன்
உன்னை நேர்த்தியாய் காட்டுவேன்
கனி தரும் விருட்சமாய்
உன்னை விருத்தியாக்குவேன் - 2 - எழும்பி

2. சிறகையிழந்த கழுகைப்போல
உன் மனம் கலங்குதோ?
சிதறிப்போன சிலரை நினைத்து
சிதைந்து நீ போனாயோ? - 2

சிறுமை பொறுத்தால்
புது சிறகுகள் காண்பாய்
சிறகை விரித்தால்
பெரும் சிகரங்கள் காண்பாய் - 2 - எழும்பி


Ezhumbhi vaa nee...
En piriyamae en roobavathiyae - 4

Saambalai singaramaaki
Pulambalai aananthamaakuven - 2 - Ezhumbhi

1. Udainthu pona kanavaal
Unthan vaalkaiye kasakutho? (kasanthatho?)
Vilunthu pona tharunangal ninaithu
Nambhikai ilanthaayo? - 2

Paruvangal maatruven
Unnai nerthiyaai kaatuven
kani tharum viruthchamaai
unnai viruthiyaakuven - 2 - Ezhumbhi

2. Siragai ilantha kalugai poela
Un manam kalangutho?
Sitharipona silarai ninaithu
Sithainthu nee ponayo? - 2

Sirumai poruthaal
Puthu siragugal kaanpaai
Siragai virithaal
Perum sigarangal kaanpaai - 2 - Ezhumbhi