Halleluiah Halleluiah Ennai Kandavare

அல்லேலூயா அல்லேலூயா (4)
என்னைக் கண்டவரே
என்னைக் காண்பவரே
என்னைக் காத்தவரே
என்னைக் காப்பவரே
- என்னைக் கண்டவரே

அல்லேலூயா அல்லேலூயா (4)

(1) ஆவியாய் இருந்த என்னைக் கண்டுகொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே
- ஆவியாய் இருந்த
- அல்லேலூயா அல்லேலூயா (4)
- என்னைக் கண்டவரே (2)

(2) கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரே
கொடுத்த வாக்குதத்தம் பூர்த்தி செய்தீரே
புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே
- கடந்த காலமெல்லாம ;
- அல்லேலூயா அல்லேலூயா (4)
- என்னைக் கண்டவரே (2)

(3) தள்ளாடி நடந்த என்னைத் தேடி வந்தீரே
மதில்களை தாண்டும்படி தூக்கிவிட்டீரே
நெரிந்த நாணலைப்போல் வாழ்ந்து வந்தேனே
எரியும் தீப்பிளம்பாய் மாற்றிவிட்டீரே
- தள்ளாடி நடந்த
- அல்லேலூயா அல்லேலூயா (4)
- என்னைக் கண்டவரே (2)

அல்லேலூயா அல்லேலூயா (8)