Innalil Yesunathar Uyirpithar

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்

மகிழ் கொண்டாடுவோம்(2)

2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க
புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க - மகிழ்

3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட
அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட - மகிழ்

4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்
பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் - மகிழ்

5. இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம்
எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம் - மகிழ்


1. Innalil yesunathar uyirpithar kambeeramaai
Igal azhagai saavum vendrathiga veeramaai

Magil kondaduvom (2)

2. Poresevagar samathi soolnthu kavliruka
Pugalarnthelunthanar thoothan vanthu kalmoodi pirika - magil

3. Aathikalaiyil seemanodu yovanum oodida
Akkalaraiyininreginar ivar aainthu thedida - magil

4. Parisuthanai alivukaana voteer endru mun
Pagar vetha sorpadi pethamathrelunthaar thirusuthan - magil

5. Ivannamaai paran seyalai enni naaduvom
Elarumae kali koornthinithudan sernthu paaduvom - magil