Jeba Aavi Enmel Ootridum

ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்,
ஜெப வீரனாய் என்னை மாற்றிடும் - 2
சோராமல் ஜெபித்திட, சோதனை ஜெயித்திட
உம் ஆவி என்மேல் ஊற்றிடும்
கருத்தாய் ஜெபித்திட, சாத்தானை ஜெயித்திட
உம் ஆவியால் என்னை நிரப்பிடும் 2

ஊற்றிடும் ஊற்றிடும்
ஜெப ஆவி என்மேல் ஊற்றிடும்
நிரப்பிடும் என்னை நிரப்பிடும்
அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் 2

1. தானியேல் போல இடைவிடாமல்,
ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
கெர்ச்சிக்கும் சிங்கங்கள் மேற்க்கொள்ள வந்தாலும்
கட்டிடும் வல்லமை தந்திடும் - 2
நான் கட்டும்போது கட்டப்பட,
கட்டவிழ்க்கும் போது அவிழ்க்கப்பட-2
அதிகாரம் எனக்குள் தந்திடும் - 2

2. பவுலைப்போல இராமுழுவதும்
ஜெபிக்கும் ஆவியை ஊற்றிடும்
சிறைக்கதவுகள் தகர்க்கும் படியாய்
வல்லமை எனக்குள் தந்திடும் - 2
வாசல்கள் தானாய் திறந்திட,
நம் வாழ்வில் கட்டுகள் உடைக்கப்பட- 2
வல்லமை எனக்குள் தந்திடும் -2

3. திறப்பின் வாசலில் நின்று
ஜெபிக்கும் விண்ணப்ப ஆவியை ஊற்றிடும்
உலகை கலக்கும் மனிதனாக
என்னை முழுவதும் மாற்றிடும் - 2
சிறை பட்டோரை விடுவிக்க,
காயப்பட்டோர்க்கு காயம்கட்ட - 2
பரிசுத்த ஆவியால் நிரப்பிடும் - 2