Kaariyathai Vaika Panum Devan

காரியத்தை வாய்க்க பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் என் முன்னே போவார் - 2
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் (உன் காரியங்கள்) - 2

இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குதத்தம் சுதந்தரிக்க செய்வார் - 2

கன்மலையை தடாகமாய் மாற்றி
கற்பாறை நீரூற்றாக செய்வார் (உன்) - 2
அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த ஆண்டு (நாளில்) திறப்பார் (ஓ)- 2

வானத்தின் பலகணியை திறந்து
இடங்கொள்ளா ஆசிதனை தருவார் (ஓ)- 2

அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார் (ஓ) - 2

தாமதங்கள் துரிதமாக மாறி
அற்புதங்கள் கையில் சேர செய்வார் (உன்) - 2

நஷ்ட பட்டு இழந்து போனதெல்லாம்
இந்த ஆண்டு இரண்டு மடங்கு தருவார் (நீ) - 2

காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
கோணலாக தோன்றுவதை எல்லாம்
நேராக மாற்றி எனக்கு தருவார்


Kaariyathai vaika panum devan
Intha aandum en munae povaar - 2
Kaariyangal maaruthalai mudiya
Intha aandum arputhangal seivar ( Un kaariyangal ) - 2

Intha aandu kirubaiyin aandu
Avarae en yuthangalai seivar
Intha aandu magimaiyin aandu
Vaakuthatham suthantharika seivar - 2

Kanmalaiyai thadagamaai maatri
Karparai neerutraaga seivar (Un) - 2
Adainthu pona oru valiku bathilaai
Yelu valiyai intha aandu (naalil) thirapar (O) - 2

Vaanathin palakaniyai thiranthu
Edankolla aasithanai tharuvar (O) - 2

Amuki kuluki sarinthu vila seithu
kalangiyangal nirambi valiya seivar (O) - 2

Thamathangal thurithamaaga maari
Arputhangal kaiyil sera seivar (Un) - 2

Nastha patu ilanthu ponathellam
Intha aandu irandu madangu tharuvar (nee) - 2

kaariyangal maaruthalaai mudiya
Intha aandum arputhangal seivar
Koonalaga thondruvathai ellam
Neraga maatri enaku tharuvaar