Kondaduvom Naam Kondaduvom

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்
- கொண்டாடுவோம்

எக்காளம் ஓதி ஏழு நாட்களும் யேகோவா தேவனைக் கொண்டாடுவோம் (2)
- கொண்டாடுவோம்

1. பழிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில் பாடிக் கொண்டாடுவோம் (2)
தீயவன் நடுவில் வருவதில்லை (2)
கர்த்தரோ ஜெயம் எடு;த்தார் நம் கர்த்தரோ ஜெயம் எடுத்தார்
அகமகிழ்வோம் ஆக்களிப்போம் ஆனந்த சத்தமிடுவோம் (2)
- கொண்டாடுவோம்

2. நல்லவர் கர்த்தர் கிருபை உள்ளவர் என்று நாம் உயர்த்திடுவோம் (2)
கர்த்தரின் மகிமை மேகம் போல (2)
இறங்கட்டும் இந்நாளிலே (2)
அகமகிழ்வோம் ஆக்களிப்போம் ஆனந்த சத்தமிடுவோம் (2)
- கொண்டாடுவோம்

3. அசைக்க முடியா கூடாரம்; ஆவோம் அமைதியின் இல்லமாவோம் (2)
நோயாளி என்று சொல்வதில்லை (2)
குற்றங்கள் நீங்கியதே நம் குற்றங்கள் நீங்கியதே
அகமகிழ்வோம் ஆக்களிப்போம் ஆனந்த சத்தமிடுவோம் (2)
- கொண்டாடுவோம்