Neer Illatha Naal Ellam Naalaguma

நீர் இல்லாத நாள் எல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்வாம் வாழ்வாகுமா (2)

உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய் (2)
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் (2) - நீர் இல்லாத

எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய் (2)
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் ஆவாய் (2) - நீர் இல்லாத

எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய் (2)
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய் (2) - நீர் இல்லாத