Piranthar Piranthar Christu

பிறந்தார் பிறந்தார்
கிறிஸ்து பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும்
வெற்றி முழங்க ஓ – 2

அவரே வெளிச்சம்
அவரே சத்தியம்
அவரே நிச்சயம்
அவரே நித்தியம் - 2

மண்ணில் சமாதானம்
விண்ணிலும் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க
என் மன்னன் பிறந்தார்

மாந்தர் யாவரும்
போற்றி பாடுங்கள்
மன்னன் இயேசுவை
வாழ்த்தி பாடுங்கள் - 2

தூதர் சேனைகள்
எக்காளம் முழங்க
எந்நாளும் தொனிக்க
எம் மன்னன் பிறந்தார் - 2